தெய்வங்களின் திருவிளையாடல்கள்: கம்யூனிசத்தின் தொட்டிலில் இருந்து முதலாளித்துவத்தின் கல்லறை வரை
இடைவேளை முடிந்து விட்டது, அமெரிக்கா!
ஹே ஹேய்! நாம் புதிய உலக ஒழுங்கின் மத்தியில் இருக்கிறோம்!
பேரரசுகள் எழும், வீழும், சரியும். ரோமானியர்கள், ஒட்டோமனியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என வரலாறு இந்த சுழற்சியைக் கண்டுள்ளது. அவர்கள் எல்லோரும் கவிழ்க்கப்பட்டார்கள், நாம் கவனமாக இல்லையென்றால், அடுத்து அமெரிக்காவுக்கும் அது ஏற்படும்.
இன்று பல நிறுவனங்களும் கடனுக்கு அடிமையாகி, நிதி-உபாயங்களின் கூடாரத்தில், வெதுவெதுப்பான எண்ணெய் குளியலில் நீந்தும் தவளைகளின் கதிக்கு ஆளாகியுள்ளன. துரதிருஷ்டவசமாக, இவற்றில் பல அறிவுசார் சொத்துரிமையைக் கவ்விய கழுகுகளின் பிடியில் நிர்கதியாய் கேட்பாரற்று போகலாம்.
நம்முடைய துருப்புச் சீட்டுக்களை நாம் சரியாக பயன்படுத்தாவிட்டால், அகோரப் பசி கொண்ட அடுத்த பேரரசு — சீனாவின் மத்திய சாம்ராஜ்ஜியம் — அமெரிக்காவிடம் இருந்தும் மற்றும் 2008 பொருளாதார சுனாமிக்குப் பின்னர், “பெல்ட் & ரோட் முன்முயற்சி” (BRI) முதல் அதன் “டிஜிட்டல் சில்க் ரோட்” (DSR) வரையிலான திட்டம் மூலமாக அது பொருளாதார ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் காலனித்துவப்படுத்தி உள்ள இன்னும் நூற்றுக் கணக்கான மற்ற நாடுகளிடம் இருந்தும் தவணைகளை வசூலிக்க அவர்களின் தண்டல்காரர்களை அனுப்பி, நம்மை விழுங்கிவிடும்.
“மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்புவதற்காக” — மேலும் எதிர்வரும் காலத்தில் ஏற்படவிருக்கும் நான்காம் ரீஹ்ஹில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக ரூஸ்வெல்ட் ஆண்டுகளின் சிந்தனைகள், வெற்றிகள் மற்றும் உத்வேகங்களைப் பின்பற்றி, “அமைப்பை மீண்டும் மகத்தானதாக ஆக்குதல்” முதலாளித்துவத்தின் அஸ்திவாரங்களைத் தோண்டி எடுக்கிறது.
Editor) Nandakumar Gopalan (translator, Epm Mavericks, Nandakumar Gopalan (translator/editor), Puli Murugan, Saji Madapat, Tiger Rider (Author), Rajesh Ganesapillai (Narrator)
Audiobook